தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 58 வேட்புமனு தாக்கல்! - Ramanadhapuram legislature vol

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் வேட்புமனு தாக்கல்செய்ய கடைசி நாளான இன்று (மார்ச் 19) மட்டும் 58 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 21 பேர் வேட்புமனுவைத் தாக்கல்செய்துள்ளனர்.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனு தாக்கல்
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்புமனு தாக்கல்

By

Published : Mar 19, 2021, 8:18 PM IST

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், பரமக்குடி (தனி), முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 58 வேட்புமனு தாக்கல்

வேட்புமனு தாக்கல்செய்த கட்சிகள்

அதிமுக, பாஜக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் உள்பட வேட்புமனுக்கள் தாக்கல்செய்துள்ளனர்.

மொத்தம் 132 மனுக்கள்

நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகள் மொத்த வேட்புமனு தாக்கல் இன்று மட்டும்
ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி 38 21
பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி 24 8
திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதி 32 9
முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி 38 20
  • ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 38 வேட்புமனு தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இன்று மட்டும் 21 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
  • பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தமாக 24 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அவற்றில், இன்று (மார்ச் 19) எட்டு வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
  • திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் 32 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது வேட்புமனுக்கள் இன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
  • அதேபோல் முதுகுளத்தூர் தொகுதியில் மொத்தமாக 38 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இன்று 20 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 132 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details