தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள இயந்திரங்கள் சிறு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்று மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

By

Published : Apr 6, 2021, 3:53 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள இயந்திரங்களில் சிறு தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. பிறகு அதனைச் சரிசெய்து தற்போது மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “ராமநாதபுரத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1647 வாக்குப்பதிவு மையங்களில் காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

இதற்கிடையில் ஐந்து வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சிறு கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து அதனைச் சீர்செய்து தற்போது மீண்டும் வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றுவருகிறது.

மாவட்டத்தில் 80 இடங்களில் 228 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமாகக் கண்டறியப்பட்டு, அங்குத் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ரூ.2.20 கோடி பொருள்கள் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details