ராமநாதபுரம் மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் எனப் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது.
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் இணைந்து ஆய்வுசெய்தனர்.
அதன்பின் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரோனா வைரஸ் (தீநுண்மி) தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன.
தற்பொழுது மாவட்டத்தில் 510 பேர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மாவட்டத்தில் போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர் கருவிகள் இருப்பு உள்ளன” என்று கூறினார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 49 ஆயிரத்து 177 பேர் முதல் தவணை ஊசி செலுத்தியுள்ளதாகவும், 10 ஆயிரத்து 32 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஒருநாள் பாதிப்பில் மூன்றரை லட்சத்தை நெருங்கிய கரோனா!