தமிழ்நாடு

tamil nadu

1900 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்

By

Published : May 5, 2021, 3:09 PM IST

ராமநாதபுரம்: கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1900 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேரடியாகச் சென்று ஆய்வு
மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேரடியாகச் சென்று ஆய்வு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நேரடியாகச் சென்று பார்வையிட்டு கரோனா நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படி மருத்துவமனை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தொடர்பு நிலையத்தில் பணிகளை ஆய்வு செய்து, பின் பாதிக்கப்பட்டவரிடம் நேரடியாகப் பேசும் களப்பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

1900 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 1,227 பேர் கரோனா நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் நோயாளிகளை எதிர்கொள்ள எதிர்கொள்வதற்காக மாவட்டத்திலுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 600 படுக்கைகளும், 200 இதர அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகளும் என ஆயிரம் படுக்கைகள் உள்ளன.

இதில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 600 படுக்கைகளை நோய் பரவலின் தீவிரத்தை உணர்ந்து ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் இந்த பணி முடிவடைந்துவிடும். மொத்தமாக 1900 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க:செங்கல்பட்டு 11 பேர் மரணம்: நெஞ்சை உருக்கும் ஓலங்கள்

ABOUT THE AUTHOR

...view details