தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடை செய்யப்பட்ட கடல் பல்லி பறிமுதல் - ஒருவர் கைது - sea lizard'

ராமநாதபுரம்: பதப்படுத்தப்பட்ட நிலையில் 10 கிலோ கடல் பல்லிகளை வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ramanathapuram

By

Published : Aug 6, 2019, 9:19 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி புதுக்குடியைச் சேர்ந்தவர் காளிமுத்துவின் மகன் நாகநாதன். இவர் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள அரிய வகை கடல் பல்லிகளை தன்வசம் வைத்திருந்தார்.

இது பற்றி நாகநாதனிடம் விசாரணை நடத்திய கடல்சார் அலுவலர்கள், அவரிடமிருந்து 10 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் பல்லிகளை பறிமுதல் செய்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details