தூய்மைப் பணியாளர்களின் மகத்துவம் புரியத் தொடங்கியுள்ளது! - இளைஞர்கள்
புதுக்கோட்டை: தூய்மைப் பணியாளர்கள் பணியினைப் பாராட்டி அவர்கள் காலில் விழுந்து மரியாதை செலுத்திய இளைஞர்கள்.
புதுக்கோட்டையில், கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் இருக்க நகரம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணி, குப்பைகளை அள்ளி சுத்தப்படுத்தும் பணியினை செய்து வருகின்றனர். அவர்களைப் பாராட்டி மரியாதை செலுத்தும் வகையில் 45 தூய்மைப் பணியாளர்களுக்கு, பெரியார் நகர் இளைஞர்கள் சார்பில் சமையல் செய்ய உணவுப் பொருள்கள், முகக் கவசம், கைக்கவசம் உள்ளிட்டவைகளை வழங்கி வணங்கி, அவர்களது கால்களில் விழுந்து மரியாதை செலுத்தினார்கள். அதனைப் பெற்றுக்கொண்ட தூய்மைப் பணியாளர்கள் நெகிழ்ச்சியுடன் தங்களது நன்றியைத் தெரிவித்து பணியினை செய்து வருகின்றனர்.