புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி வீசிய கஜா புயலில் மாவட்டத்தின் பல பகுதிகளில் லட்சக் கணக்கான மரங்கள் உடைந்து நாசமானது. அதன் விளைவாக இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பல வருடங்களாக வளர்த்து புயலில் இழந்த மரங்களை மீண்டும் மீட்டெடுப்போம் என்ற முயற்சியில் அன்னவாசல் நீயூ பாய்ஸ் குழுவை சேர்ந்த பல இளைஞர்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு பகலாக மரங்களை நடும் இளைஞர்கள்! - tree plantation
புதுக்கோட்டை: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடும் பணியில் அன்னவாசல் பகுதி இளைஞர் குழுவினர் இரவு பகலாக ஈடுபட்டனர்.
இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி அன்னவாசல் நீயூ பாய்ஸ் குழு இளைஞர்கள் மற்றும் கிராமத்தார்கள் சார்பில் கஜா புயலில் இழந்த மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அன்னவாசல் பகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள், அரசு பள்ளிகள், அலுவலகங்கள், சாலையோரங்கள், என பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒளி குறைவான இடங்களில் விளக்கின் வெளிச்சத்தில் மரக்கன்றுகளை நட்டனர். அத்துடன், ஒவ்வொரு மரகன்றுக்கும் சரியான முறையில் வளர பாதுகாப்பு கூண்டகளை அமைத்து வைத்தனர்.
இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், 'எங்களை புரட்டிப் போட்ட கஜா புயலில் இழந்த மரங்களை மீட்கும் முயற்சியாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றோம். கிராமத்தினரின் ஒத்துழைப்புடன் பணியை தொடங்கி உள்ளோம். தற்சமயம் அன்னவாசல் பெரிய குளத்தில் பகலில் ஆரம்பித்த பணி இரவுவரை நீடித்தது. பொக்லைன் வண்டி வெளிச்சத்தின் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளோம்' என்றனர்.