புதுக்கோட்டை மாவட்டம் பொண்ணமங்கலம் கிராமத்தில் செயல்பட்டுவரும் இறால் பண்ணையில் ஒடிசாவைச் சேர்ந்த ராஜ் கிஷோர் (22) பணிபுரிந்துவருகிறார்.
புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு! - Pudukkottai District News
புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
இந்நிலையில் இவர் பண்ணையில் உள்ள சுவிட்ச் போர்டை போட்டுள்ளார். அப்போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயக்கமடைந்தார். பின் அங்கிருந்தவர்கள் அவரை மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து மீமிசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:மதுபோதையில் நடந்த நீச்சல் போட்டி: ஏரியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!