சிசிடிவி காட்சி மூலம் பைக் திருடிய இளைஞரை தேடும் போலீஸ் - வீடியோ
புதுக்கோட்டை: நள்ளிரவில் இளைஞர் ஒருவர் பைக்கை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதனை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பைக் திருடிய இளைஞர்
புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதி இந்திரா நகரை சேர்ந்த மார்டின் என்பவர் தனது நண்பன் புதிதாக வாங்கிய பைக்கை எடுத்துக்கொண்டு செவ்வாய்கிழமை இரவு பணிக்குச் சென்று உள்ளார். காலையில் அவர் சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை காணவில்லை. இதையடுத்து அருகில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது அதில் ஒரு இளைஞர் அந்த பைக்கை திருடிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இதனையடுத்து மார்ட்டின் காவல்துறையிடம் புகார் செய்தார்.