தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதலிக்க மறுத்த மாணவியை கொலை செய்த இளைஞர் தற்கொலை - புதுக்கோட்டை குற்றச் செய்திகள்

குளவாய்பட்டி அருகே கல்லூரி மாணவியை, அண்ணன் முறை உடைய இளைஞர் காதலிக்க வற்புறுத்தி வந்த நிலையில் மறுத்த மாணவியை கொலை செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 18, 2023, 8:48 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டி அருகே மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவரின் மகள் பவித்ரா. இவர் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த கல்லூரி மாணவி பவித்ராவை, அதே பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் துரை என்ற இளைஞர் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் பவித்ரா, துரை இருவரும் அண்ணன் தங்கை உறவு என்று தெரியவந்ததால், பவித்ரா துரையை காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும் துரை அதை புரிந்து கொள்ளாமல் பவித்ராவை தொடர்ந்து காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட பவித்ரா வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனையடுத்து வழக்கம்போல பவித்ராவின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்ற நிலையில் பவித்ராவின் வீட்டிற்குள் புகுந்த துரை, தன்னை காதலிக்குமாறு பவித்ராவிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது. அப்போது பவித்ரா மறுக்கவே, துரை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவித்ராவை வெட்டிக் கொலை செய்துள்ளார்.

பின்னர் துரையும் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குடி காவல் துறையினர், இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை மற்றும் தற்கொலை குறித்து தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தை சாதகமாக பயன்படுத்தி கொலை நாடகம் - ஒடிசா இளைஞர் சிக்கியதன் பின்னணி?

ABOUT THE AUTHOR

...view details