தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆணையம் போலியானது - மணியரசன் தாக்கு

புதுக்கோட்டை: காவிரி ஆணையம் போலியான ஒன்று என தமிழ் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் மணியரசன் சாடியுள்ளார்.

maniarasan

By

Published : Jun 26, 2019, 4:52 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தின் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழ் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் மணியரசன் அங்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தி மக்களை அழிக்க நினைப்பது மிகவும் கொடிய செயல். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் மீத்தேன் திட்டங்களுக்கு போடப்பட்ட தடை ஆணையை மீறி எடப்பாடி பழனிசாமி அரசு துரோகம் செய்துவருகிறது.

செய்தியாளர்கள் சந்திப்பில் மணியரசன்

மசூத் உசேன் தலைமையிலான காவிரி ஆணையம் போலியான ஒன்று. தமிழர்களை வஞ்சிப்பதற்காக மோடி அரசு உருவாக்கியது, எனவே அதை கலைத்துவிட்டு முழுநேரம் செயல்படும் அலுவலர்களுடன் கூடிய புதிய ஆணையத்தை உருவாக்க மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details