புதுக்கோட்டை:பொன்னமராவதி ஒன்றியத்தில் 16 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 42 ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர். பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர்களிடம் ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், அரசு ஒப்பந்ததாரர்களும் கவுன்சிலர்கள் சொன்னால் எந்த பணியையும் செய்வதில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
அரசு அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தாலும் முறையாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன் என்பவர் ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஊராட்சி மன்ற தலைவர்களையும் மக்களே தேர்ந்தெடுக்கின்றனர் எங்களையும் மக்களே தேர்ந்தெடுக்கின்றனர் எனவே அரசு அலுவலர்கள் எங்கள் கோரிக்கைக்கும் செவிசாய்க்க வேண்டும் என என்பது பொன்னமராவதி ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:உதயநிதி அமைச்சராவதற்குத் தகுதியானவரா? - டி.கே.எஸ் இளங்கோவன் சிறப்பு நேர்காணல்