தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பைக்குழிக்காக வெட்டியிருந்த பள்ளத்தில் விழுந்து சிறுவர்கள் உயிரிழப்பு! - பள்ளத்தில் விழுந்த சிறுவர்கள் உயிரிழப்பு

புதுக்கோட்டை: திருமயம் அருகே குப்பைக்குழிக்காக வெட்டியிருந்த பள்ளத்தில், தேங்கியிருந்த நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.

குப்பைக்குழிக்காக வெட்டியிருந்த பள்ளத்தில் விழுந்து சிறுவர்கள் உயிரிழப்பு!
Small boys dead after fell into dimple

By

Published : Sep 10, 2020, 10:57 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சந்தன விடுதி பகுதையைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் அன்புச்செல்வன்(8). இவர் 3 ம் வகுப்பு தேர்ச்சியடைந்துள்ளார்.

இவரும், 5ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த சிங்கப்பூர் கருப்பையா மகன் விமல்ராஜ்(10) ஆகிய இருவரும் தற்போது கரோனா ஊரடங்கால் பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

இவர்களது வீட்டின் அருகே வசிப்பவர் விவசாயி பழனியப்பன். இவர் தன் நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் குப்பைக்குழி தோண்டியிருந்தார். அதில் நேற்று பெய்த மழையால் நீர் நிரம்பியிருந்துள்ளது.

இதனையாரியாமல் அங்கு விளையாடிக்கொண்டிருந்த அன்புச்செல்வன், விமல்ராஜ் ஆகிய இருவரும் காலை கழுவுவதற்காக குழிக்குள் இறங்கியுள்ளார். ஆழம் தெரியாமல் குழிக்குள் இறங்கிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன், வட்டாட்சியர் ரத்தினாவதி உள்ளிட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைதொடர்ந்து, இச்சபவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருமயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details