புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடற்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 233 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதில் ஹபிப் ரகுமான் என்பவருக்கு சொந்தமான INDTN-08MM-1675 என்ற பதிவு எண் கொண்ட விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த ஜெரோன், கெம்ப்லஸ், மெக்சன், ரவி ஆகிய 4 பேரும் கடலுக்குள் மீன்பிடிக்க கோட்டைப்பட்டினத்தில் இருந்து 35 நாட்டிகல் மைல் தொலைவுக்கு சென்றனர்.
4 மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை விசாரணை!
புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நான்கு மீனவர்களை கைதுசெய்து இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
fisherman
அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Last Updated : Sep 10, 2019, 7:58 AM IST