விருதுநகர் மக்களவைத் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “சட்டப்பேரவையில் அதிமுகவுக்கும் விஜயகாந்திற்கும் ஏற்பட்ட மோதலுக்கு திமுகதான் காரணம். அதிமுக, தேமுதிக கூட்டணியை பிரிப்பதற்காக சட்டப்பேரவையிலேயே சதிசெய்து கூட்டணியை திமுக முறிக்க செய்தது” என்றார். அவரது இந்த பேச்சு புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.
'விஜயகாந்தை பிரேமலதா அப்படி சொல்லியிருக்க கூடாது' - திருநாவுக்கரசர்
புதுக்கோட்டை: விஜயகாந்த் சுயமாக சிந்தித்து சொந்த புத்தியுடன் செயல்பட்டதில்லையா என திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
arasu
இந்நிலையில் பிரேமலதாவின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், “ விஜயகாந்த் சுயமாக சிந்தித்து செயல்பட்டதில்லையா? விஜயகாந்த் சொந்த புத்தியுடன் செயல்படவில்லை என அவரது மனைவியே கூறுவது சரியல்ல. இது அவரின் கணவரை இழிவுப்படுத்தும் செயல். இனிவரும் காலங்களில் விஜயகாந்த் குறித்து பிரேமலதா இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.