தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகின் மிகச்சிறிய வாக்குப்பதிவு இயந்திரம் - அசத்திய கைவினைக் கலைஞர்! - pudukottai district news

புதுக்கோட்டை: உலகின் மிகச்சிறிய வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கத்தினால் செய்து புதுக்கோட்டையை சேர்ந்த கைவினைக் கலைஞர் அசத்தியுள்ளார்.

gold_evm
gold_evm

By

Published : Apr 5, 2021, 4:30 PM IST

புதுக்கோட்டையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் வீரமணி என்பவர் உலகின் மிகச்சிறிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தங்கத்தினால் செய்து அசத்தியுள்ளார்.

இரண்டரை கிராம் எடையுள்ள EVM என்றழைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தனது எட்டு மணி நேர கடின உழைப்பால் ஐந்துக்கும் மேற்பட்ட தனது சக தொழிலாளர்களின் உதவியுடன் வடிவமைத்துள்ளார்.

ஏற்கனவே இவர் உலக கால்பந்து போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் மிகச்சிறிய தங்கத்தினாலான கால்பந்தை உருவாக்கினார்.

உலகின் மிகச்சிறிய வாக்குப்பதிவு இயந்திரம்

மேலும் மிகச் சிறிய மாங்கல்யம் செய்து அசத்திய வீரமணி சென்ற ஆண்டு தொடக்கத்தில் கரோனா நோய் தொற்றிலிருந்து மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் தங்கத்தினால் கரோனா கம்மல் செய்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

தற்போது 100 சதவீத வாக்குப்பதிவு செய்து மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் உலகிலேயே மிகச் சிறிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை செய்து எல்லோரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க: திருவாரூரில் ரூ.2 கோடி பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details