தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்திற்கு சென்ற நபர் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு! - pudhukottai latest news

புதுக்கோட்டை: பனையப்பட்டியில் நண்பனின் திருமணத்திற்குச் சென்ற நபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pudhukottai
pudhukottai

By

Published : Jan 31, 2020, 11:52 AM IST

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் (40) என்பவர் இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கொன்னையூரில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்தில் கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, வீடு திரும்பிய அவர் வழியில் தனது நண்பர்களுடன் பனையப்பட்டி சிவன் கோயில் ஊரணி குளத்தில் குளித்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரின் உடல், அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அவரது நண்பர்களால் மீட்கப்பட்டு, திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது குறித்து பனையப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details