புதுக்கோட்டையில் பரப்புரையின் போது அவர் கூறியதாவது, மக்கள் பாஜக ஆட்சியினை விரட்டி அடிக்க வேண்டும். அப்போதுதான் மக்களின் கஷ்டம் தீரும்.
மக்கள் பாஜக ஆட்சியினை விரட்டி அடிக்க வேண்டும் - திருநாவுக்கரசர் - விரட்டி அடிக்க வேண்டும்
புதுக்கோட்டை: மக்கள் பாஜக ஆட்சியினை விரட்டி அடிக்க வேண்டும் என்றும், அப்போது தான் மக்களின் கஷ்டம் தீரும் என காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
அம்மா ஆட்சி, அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனி ஆட்சி நடத்தி வருகின்றனர். இவர்கள் எல்லாம் அரசியலுக்கு தகுதியானவர்களே இல்லை, ஒரு சின்னம் கூட நிரந்தரமாக வைத்துக் கொள்ள முடியவில்லை அப்படிப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பது தலையில் மண்ணை வாரி போட்டுக் கொள்வதும் ஒன்றுதான்.
மேலும் புதுக்கோட்டையில் உச்சிவெயிலில் ஒவ்வொரு கிராமமாக சென்று பரப்புரை செய்து வருகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. கண்டிப்பாக இம்முறை காங்கிரசு தான் ஆட்சிக்கு வரும். ராகுல் காந்தி பிரதமரானால் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என அனைவருக்கும் நலம்பெறும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.