தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புயல் குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை - விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை: புயல் குறித்து சமூகவலைதளத்தில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.

minister vijayabaskar
minister vijayabaskar

By

Published : Nov 23, 2020, 6:07 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் சிவிபி அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் விலையில்லா கண் கண்ணாடி வழங்கும் முகாம்கள் நடந்துவருகிறது. இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இலவச கண் கண்ணாடியை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து, கண் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் வரவுள்ள புயலை எதிர்கொள்ள முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.

கடந்த கஜா புயலின்போது முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் பல்வேறு சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று எதிர்வரும் புயலை எதிர்கொள்ள வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் ஒருங்கிணைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். எதையும் எதிர் கொள்வதற்கு தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது. புயல் குறித்த அச்சம் எச்சரிக்கை பொதுமக்களுக்கு அவசியம் தேவை.

புயல் குறித்து தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை

புயல் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்தார்.

இதையும் படிங்க:நிவரை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்! - அமைச்சர் தங்கமணி

ABOUT THE AUTHOR

...view details