புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் பொதுவாகவே அதிக வாடிவாசல்களைக் கொண்ட மாவட்டம் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டையும் தமிழர்களையும் பிரிக்க முடியாத ஒன்று. பெற்ற பிள்ளைகள் கூட இல்லாமல் வாழ்ந்து விடுவேன் ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று போட்டிக்கு ஆயத்தமாகி வரும் ஜல்லிக்கட்டு வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு மாடுகள் குறித்த ஒரு தொகுப்பைக் காணலாம்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஒரு கிராமம் தான் ராப்புசல் கிராமம், இந்த கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் இருக்கிறதோ இல்லையோ ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்று இருப்பதைக் காணலாம். ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பதற்கு என்னென்ன உணவு முறைகள் தேவைப்படுகிறது என்பது குறித்து அந்த ஊரைச் சேர்ந்த சந்திரா கூறுகையில், ‘தவிடு புண்ணாக்கு மற்றும் கொண்டைக்கடலை உள்ளிட்ட சத்தான உணவுகளைக் காளைக்கு வழங்குவதாகவும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல் நாள் மட்டுமே கடலை மிட்டாய் வாழைப்பழம் தேங்காய் உள்ளிட்ட பொருள்கள் கொடுத்து அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.
மேலும் தினமும் கட்டாயமாக நடைப் பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் கூறினார். வாரத்திற்கு மூன்று முறை நீச்சல் பயிற்சி அளித்து வருவதாகவும் கூறுகிறார் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல் நாள் வீட்டிலேயே குளிப்பாட்டி விட்டு சாம்பிராணி காண்பித்து வீட்டில் விபூதி போட்டு அனுப்புவது அவர்கள் வழக்கம் என்றும் கூறினார்கள்