தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சமூக வலைதளத்தில் பெண் காவலர் குறித்து அவதூறு: அதிமுக நிர்வாகி கைது - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: சமூக வலைதளத்தில் பெண் காவலர் குறித்து அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிமுக நிர்வாகி கைது
அதிமுக நிர்வாகி கைது

By

Published : Nov 10, 2020, 5:53 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை சோதனைச் சாவடியில் பெண் காவலர் ஒருவர் பணியில் இருந்தபோது, மதன் குமார் என்பவர் ஒரு வழிப் பாதையில் வந்தார்.

உடனே பெண் காவலர் இந்த வழியே செல்லக்கூடாது என்று தெரிவித்தார். அதற்கு தான் அதிமுக நிர்வாகி எனவும் வழி விடவில்லை என்றால் வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவதாகவும் மதன் குமார் மிரட்டியுள்ளார்.

இருப்பினும் பெண் காவலர், மதன் குமாரை அவ்வழியாக விட வில்லை. இதனால் சமூக வலைதளத்தில் பெண் காவலர் குறித்து அதிமுக நிர்வாகி அவதூறு பரப்பியுள்ளார். இதன் தொடர்ச்சியாக பெண் காவலர் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மதன் குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: சமூக ஊடகங்களில் மும்பை காவல் ஆணையர் குறித்து அவதூறு பதிவு!

ABOUT THE AUTHOR

...view details