தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 மாதத்தில் 200 பேர் மீது மணல் கடத்தல் வழக்கு: காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் - புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டை: இரண்டு மாதத்திற்குள் 200 பேர் மீது மணல் கடத்தல் வழக்கு போடப்பட்டுள்ளது என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

sand-smuggling-case-against-200-people-in-2-months-in-pudukkottai
sand-smuggling-case-against-200-people-in-2-months-in-pudukkottai

By

Published : Sep 18, 2020, 9:10 PM IST

கரூர் மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் திருடி புதுக்கோட்டை நோக்கி வருவதாக கரூர் மாவட்ட காவல் துறையில் இருந்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை ஏடிஎஸ்பி. ராஜேந்திரன் தலைமையில் 19 பேர் கொண்ட குழு மாவட்டத்தில் அதிரடியாக நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுக்கோட்டை மாலையீடு அருகே 3 இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் காவல் துறையினர் தடுத்து நிற்காமல் வேகமாக பொன்னமராவதி பகுதியை நோக்கிச் சென்றனர்.

இதனால் அவர்களில் ஒருவரை மட்டும் காவல் துறையினர் துரத்தி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் அருகம்பாளையத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பது தெரியவந்தது.

பின்னர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காவல் கண்காணிப்பாளர் பாலாஜிசரவணன்

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறுகையில், '' சினிமா பாணியில் துரத்திச் சென்று குற்றவாளிகளை கைது செய்த 19 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் நடக்கும் குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

மேலும் கடந்த 2 மாதத்தில் 200 மணல் கடத்தல் வழக்குகள் போடப்பட்டுள்ளது. அதில் அதிகளவில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர்கள் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மற்றும் லாட்டரி டிக்கெட் விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்'' என்றார்.

இதையும் படிங்க:விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் உயிரிழந்த விவகாரம் - கையிலெடுத்த மனித உரிமைகள் ஆணையம்!

ABOUT THE AUTHOR

...view details