சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் புதுக்கோட்டை:பொற்பனைகோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி மேம்பாட்டு பணிகளை, தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யாயுடன் இணைந்து ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகமான புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் பழங்காலத்து பொருள்கள், மன்னர் காலத்தில் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள், தோட்டாக்கள், பீரங்கிகள், பறவை இனங்கள், பாம்பு இனங்கள் உள்ளிட்டவைகள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவைகளைப் பாதுகாப்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியங்களை மேம்படுத்துவதற்கும், அருங்காட்சியத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய அருங்காட்சியகமான புதுக்கோட்டை அருங்காட்சியகப் பணிகளை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பீகார் துணை முதல்வர் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது சிறப்பு நீதிமன்றம்!
மேலும், கீழடி அருங்காட்சியகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருநெல்வேலியில் பொருனை ஆற்றின் நாகரீகத்தை வெளிக்கொணரும் வகையில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சாவூரில் சோழர் அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, புகழ்பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலாத் தளத்தை மேம்படுத்துவதற்கும் அரசுப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்றவாறு புரதான சின்னங்களின் தொன்மைகள் மற்றும் அவைகள் இருக்கும் இடம் உள்ளிட்டவைகளை சுற்றுலா வாசிகள் எளிதாக கண்டுபிடிப்பதற்கும், அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக கியூ ஆர் கோடு (QR Code) வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அருங்காட்சியகங்களில் உள்ள பறவைகள் விலங்கினங்கள் உள்ளிட்டவைகளை பதப்படுத்துவதற்கு, அமிலங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:திருமணத்திற்கு மீறிய உறவால் நிகழ்ந்த கொலை.. மாமியார் வீட்டு முன் தலையை வீசிய கொடூரம்!