புதுக்கோட்டை மாவட்டம், கரூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த விராலிமலை சட்டமன்றத் தொகுதி எல்லையான மணப்பாறை-விராலிமலை சாலையில் உள்ள அத்திப் பழம் என்ற இடத்தில் விராலிமலை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
புதுக்கோட்டையில் ஒன்றரை லட்சம் பணம் பறிமுதல் - pdk
புதுக்கோட்டை: அத்திப் பழம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை மேற்கொண்ட வாகன சோதனையில், திருச்சியைச் சேர்ந்த நபரிடமிருந்து சுமார் 1.30 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விராலிமலை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள்
அப்போது, அவ்வாழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி 1 லட்சத்து 33 ஆயிரத்து 370 ரூபாய் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, காரில் இருந்த பணத்தைப் பறிமுதல் செய்த பறக்கும் படையினர், காரை ஓட்டிவந்த திருச்சியைச் சேர்ந்த ஜான் பெர்னாண்டோ (27) என்பவரை விசாரிப்பதற்காகக் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.