புதுக்கோட்டை: நார்த்தாமலை அருகே சிஐஎஸ்ஃப் வீரர்களில் துப்பாக்கிப் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயிற்சி மையத்தில் வழக்கம் போல் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
அப்போது தவறுதலாக வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்த சிறுவனின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசுத் தலைமை மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றுள்ளனர்.