தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை; இலங்கை நீதிமன்றம் உத்தரவு - புதுக்கோட்டை

புதுக்கோட்டை: எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்த எட்டு தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

sea

By

Published : Sep 3, 2019, 6:33 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டனத்தைச் சேர்ந்த மணிகண்டன், பாலகிருஷ்ணன், கார்த்திக், சதீஷ், தொண்டிஸ்வரன், முத்துமாரி, தனுஷ்கோடி, ராமலிங்கம் ஆகிய எட்டு மீனவர்களை சென்ற மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படை வழக்குப்பதிவு செய்து மீனவர்களை சிறையில் அடைத்தது.

இந்நிலையில், இன்று மீனவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி யூட்சன், எதிர்காலங்களில் எல்லையைத் தாண்டக்கூடாது என எச்சரித்து நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மேலும், அவர்களின் விசைப்படகுக்கான உரிய ஆவணங்களுடன் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி படகின் உரிமையாளர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், தவறும்பட்சத்தில் படகு இலங்கை அரசுடமையாக்கப்படும் என தீர்ப்பளித்தார்.

அதுமட்டுமின்றி, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அடுத்த வாரம் விமானம் மூலம் தாயகம் திருப்பி அனுப்பபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details