சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து விராலிமலை அருகே சென்றபோது விபத்தில் சிக்கியது. முன்னால் சென்ற லாரி மீது மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் சிக்கிய பேருந்து சாலையில் கவிழ்ந்தது. விபத்தில் படுகாயமடைந்த 20 பயணிகள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆம்னி பேருந்து கவிழ்ந்து பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு! - Viralimalai
புதுக்கோட்டை: விராலிமலை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்து
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விராலிமலை அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.