தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 15, 2020, 11:01 AM IST

ETV Bharat / state

நாட்டுப்பற்று மக்களிடத்தில் ஊறவேண்டும் - சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலை

புதுக்கோட்டை: எதை வேண்டுமானாலும் போராடி வெற்றிப் பெறலாம் என்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலை. இவர் குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலையின் பிரத்யேக பேட்டி
சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலையின் பிரத்யேக பேட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அருகேயுள்ள பவளத்தாள் புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலை (98). 1922 செப்டம்பர் 24 ஆம் தேதி பிறந்த இவர் இளமைப் பருவத்திலேயே சிங்கப்பூர் சென்று உள்ளார்.

அப்போது சுதந்திர போராட்டம் மிகவும் தீவிரம் அடைந்து இருந்த காலகட்டம். அற வழியே சிறந்தது என்று மகாத்மா காந்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியும் போராட்டம் வெற்றி அடையவில்லை. இதைடுத்து ஆயுத போராட்டம் நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று முழக்கம் செய்ததோடு மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைக் கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தார்.

சுதந்திரப் போராட்டத் தியாகி அண்ணாமலையின் பிரத்யேக பேட்டி

அந்த ராணுவ படையில் இந்தியா முழுவதிலிருந்தும், பர்மா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்தும் இளைஞர்கள் சேர்ந்தனர். அப்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்த அண்ணாமலையும் இந்திய தேசிய ராணுவப் படையில் இணைந்து கொண்டார்.

1940 முதல் 1942 வரை இந்திய தேசிய ராணுவத்தில் பணிபுரிந்தார். அரசியல் குறித்த வகுப்புகள் நடந்தபோது ஒரே ஒருமுறை மட்டும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை சந்தித்திருக்கிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947களிலும் சுதந்திர வெற்றியை சிங்கப்பூரில் இருந்துதான் கொண்டாடி இருக்கிறார் அண்ணாமலை.

பின்னர் இந்தியா வந்து சேர்ந்த அவருக்கு மத்திய, மாநில அரசுகள் கவுரவப்படுத்தினர். சுதந்திரப் போராட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து அண்ணாமலை கூறுகையில், "வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் நேதாஜியின் தலைமையில் ராணுவ படையில் இருந்தது எனக்கு மறக்க முடியாத நினைவாகும்.

அப்போது இருந்த அரசியலும் நல்லது கெட்டது என இரண்டுமே இருந்தது. அதே போல தான் இப்பொழுதும் இருக்கிறது. மக்கள் அதனை போராடி வெற்றி பெற வேண்டும்.

இளைஞர்கள் தனக்கு எது தேவையோ இல்லையோ, நிச்சயம் படிப்பை அவசியமாக கொள்ள வேண்டும். நான் 98 வயதிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையினால் தற்போது வரையிலும் கண்ணாடி கூட அணிந்ததில்லை" என்றார்.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் ஜொலித்த சென்னை விமான நிலையம்!

ABOUT THE AUTHOR

...view details