புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு அரிமளம் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்றுவருகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கவில்லை எனக் கூறி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பிரெட்டை மதிய உணவாக சாப்பிடும் தேர்தல் அலுவலர்கள்! - Officers walk away because they do not have lunch
புதுக்கோட்டை: அரிமளத்தில் வாக்கு எண்ணும் பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்காததால் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.
pudukkottai
மாலை நேரம் ஆகிவிட்டதால் உணவு கிடைக்காததால், பிரெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதனால் வாக்கு எண்ணும் பணியை செய்ய முடியாது எனக் கூறி ஊழியர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணும் பணிகள் தாமதம் - ஆட்சியர் கந்தசாமி நேரில் ஆய்வு!