தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்ஜினியர் கொலை: காவல்துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் ! - police investigation

இன்ஜினியர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக குடிபோதையில் ஆபாசமாக திட்டியதால் குத்தி கொன்றேன் என அவரது நண்பர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

pudukkottai-chennai-engineer-murder-shocking-information-in-the-police-investigation
கொலையாளி சோமசுந்தரம்

By

Published : Jul 14, 2023, 4:34 PM IST

Updated : Jul 14, 2023, 5:50 PM IST

இன்ஜினியர் கொலை: காவல்துறையினர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் !

புதுக்கோட்டைமாவட்டம், நரிமேடு, லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர், விஜயராகவன் (வயது 47). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். பின்னர் அவரது ஓழுங்கினத்தால் அந்நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கியது. இதன்பின் புதுக்கோட்டை வந்த அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரனமாக விஜயராகவனின் மனைவி அவரை பிரிந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து தனிமையில் வசித்து வந்த விஜயராகவன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இரவு, பகல் பாராமல் மது குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 11ம் தேதி முட்புதருக்குள் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் விஜயராகவன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கோகா்ணம் காவல் துறையினர் விரைந்து சென்று விஜயராகவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளியைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதையும் படிங்க :காவலர்கள் குடியிருப்பில் கைவரிசை.. போலீசிடம் சிக்கியது எப்படி?

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம்(60) என்பவர், கொலை செய்ததை ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதில், 'நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்தோம். அடிக்கடி இரண்டு பேரும் சேர்ந்து மது அருந்துவோம். வழக்கம் போல் கடந்த 10ஆம் மதியம் என் வீட்டின் அருகில் அமர்ந்து இருவரும் மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றோம். இந்நிலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டு விஜயராகவன் என்னை ஆபாச வார்த்தையால் வயது வித்தியாசம் பார்க்காமல் திட்டினார். நான் அவரை எச்சரித்தேன்! ஆனால் அவர் ஆபாச அர்ச்சனையை விட வில்லை.

இதில் பொறுமை இழந்த நான் கத்தியால் அவரை குத்திவிட்டு தப்பிச் சென்றேன். இதில் அவர் இறந்துவிட்டார்'' எனக் கூறியுள்ளார். இதனைடுத்து போலீசார் சோமசுந்தரத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

இதையும் படிங்க :வேங்கைவயல் விவகாரம்; சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி கோரி சிபிசிஐடி மனு!

Last Updated : Jul 14, 2023, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details