தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாணவர்கள் மோதல் - நடந்தது என்ன? - Pudukottai News

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பள்ளி, கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

மாணவர்களிடையே கலவரம்: என்ன செய்கிறது காவல்துறை
மாணவர்களிடையே கலவரம்: என்ன செய்கிறது காவல்துறை

By

Published : Nov 25, 2022, 5:30 PM IST

புதுக்கோட்டை: புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கிறது. இதனை காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்கும் நடைமேடை அருகே நேற்று (நவ.24) மாலை கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்களிடையே கலவரம்: என்ன செய்கிறது காவல்துறை

அந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர் இரு குழுக்களாக பிரிந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கிக்கொண்ட காட்சிகள் பதிவாகியுள்ளது. வீடியோ காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கல்லூரி மாணவியின் கணவரை தாக்கிய சேர்மன் கைது!

ABOUT THE AUTHOR

...view details