பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை பாஜகவினர் இன்று (செப்டம்பர் 17) நாடு முழுவதிலும் கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கரோனாவை மறந்து மோடிக்கு கேக் வெட்டி கொண்டாடிய பாஜக தொண்டர்கள் - மோடி பிறந்தநாள்
புதுக்கோட்டை: பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளையொட்டி 70 கிலோ அளவிலான கேக் வெட்டி பாஜக தொண்டர்கள் கொண்டாடினர்.
Pudukkottai BJP
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். அதில் ஒரு பகுதியாக திருமயம் ஒன்றியத்தில் பாஜகவினர் இணைந்து 70 கிலோ அளவிலான பெரிய கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆனால் கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் இருக்கும் இந்த சமயத்தில் கூட்டம் கூடி தகுந்த இடைவெளியின்றி பிறந்தநாள் கொண்டாடியது அப்பகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.