தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேனா வேணா.. கடல் அன்னை வடிவில் பாஜக போஸ்டர்!

புதுக்கோட்டையில் கருணாநிதியின் பேனா சிலை விவகாரம் தொடர்பாக பாஜக தரப்பினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பேனா வேணா.. கடல் அன்னை வடிவில் பாஜக போஸ்டர்!
பேனா வேணா.. கடல் அன்னை வடிவில் பாஜக போஸ்டர்!

By

Published : Feb 4, 2023, 11:42 AM IST

புதுக்கோட்டை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணிகளை சிறப்பிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அருகே, கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

புதுக்கோட்டையில் கருணாநிதியின் பேனா சிலை விவகாரம் தொடர்பாக பாஜக தரப்பினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

இதனை கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் இந்த சிலை அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல, கடற்கரையில் இருந்து சுமார் 650 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடியிலான மேம்பாலமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என பெயரிடப்பட்டுள் இந்த பேனா சிலை அமைப்பதற்கு அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இது குறித்து சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடைபெற்றது.

இதனிடையே அனைத்து விதமான ஒப்புதல்களுக்கு பின்னரே பேனா சிலை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என மாநில பொதுப் பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பாஜக அரசு தொடர்பு பிரிவு சார்பில் ‘பேனா வேணா’ என்ற தலைப்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் கடல் அன்னை எழுந்தருளிய நிலையில், ‘பேனா வேணா’ என்று கடல் அன்னை கூறுவதாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:ரூ.3 லட்சத்தில் மதிப்பீட்டில் 16 அடி உயர பேனா சிலை வைத்த திமுக நிர்வாகி!

ABOUT THE AUTHOR

...view details