தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளில்லாத கடையில் டீ ஆத்திய அமித்ஷா...! - பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் மக்கள் கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது

அமித்ஷா

By

Published : Apr 3, 2019, 11:31 AM IST

தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. தேசிய தலைவர்கள் அனைவரும் தமிழ்நாட்டிற்கு படை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவருவதை ஒட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு திரட்டும் வகையில் அமித்ஷா தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அதன்படி, நேற்று மாலை புதுக்கோட்டை அருகே உள்ள லேனா விளக்கு பகுதியில் பாஜக சார்பில் மாபெரும் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சிகள்ஆகிய கூட்டணி கட்சிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்கு அமித்ஷா நேற்று மதியம் 2.30மணிக்கு ஹெலிகாப்டரில் வருவதாக கூறியிருந்த நிலையில், மாலை 4.15 மணிக்கு சுதர்சன் கல்லூரியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். ஒரு தேசியத் தலைவர் வரும் மாபெரும் கூட்டம் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரங்கமே வெறிச்சோடி கிடந்தாலும் அமித்ஷா உரையாற்றினார். இந்நிலையில், அப்பகுதியாக சென்ற எதிர்க்கட்சியினர் சிலர்,"ஆளில்லாத கடைக்கு யாருக்குடீ ஆத்திக் கொண்டிருக்கிறார்?" கிண்டலடித்துள்ளனர்.

அமித்ஷா

ABOUT THE AUTHOR

...view details