தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெடுவாசலைத் தொடர்ந்து புதுக்கோட்டை பகுதியில் எரிவாயு எடுப்பதை எதிர்த்து மீண்டும் ஆர்ப்பாட்டம்! - ஹைட்ரோகார்பன்

புதுக்கோட்டை: கருக்காகுறிச்சி வட தெரு பகுதியிலுள்ள எண்ணெய்க் கிணற்றில் எரிவாயு எடுப்பதற்காக ஒன்றிய பெட்ரோலியத் துறை அனுமதியளித்துள்ள நிலையில், அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு

By

Published : Jun 13, 2021, 4:26 PM IST

ஒன்றிய அரசு புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி அனுமதி வழங்கிய நிலையில் மறுதினமே அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

முதற்கட்டமாக 22 நாள்கள் நடந்த போராட்டம், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் தொடர்ந்த போராட்டம் என மொத்தம் 174 நாள்கள் இப்போராட்டம் அப்போது நடைபெற்றது. தொடர்ந்து விவசாயிகளிடம் பல்வேறு கட்ட கோரிக்கைகளின் பலனாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி இத்திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வந்தது, நெடுவாசல் மக்களிடையே பெரும் வரவேற்பையும், மகிழ்ச்சியையும் தந்தது.

தொடர்ந்து நெடுவாசல், நல்லாண்டாகொல்லை, கருக்காகுறிச்சி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு கிராம சபைக் கூட்டங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி வந்தனர்.

அதன் பலனாக கடந்த 2019ஆம் ஆண்டு நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு, இங்கு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த ஜூன் 10ஆம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட ஏலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் அருகே கருக்காய்குறிச்சி வடதெரு பகுதியிலுள்ள எண்ணெய்க் கிணற்றில் எரிவாயு எடுப்பதற்காக ஒன்றிய பெட்ரோலியத்துறை அனுமதியளித்துள்ள நிலையில், அங்கு எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details