இஐஏ என்று அழைக்கக்கூடிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் நாட்டில் உள்ள இயற்கையை அழிப்பதாகவும், மக்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி பல்வேறு அமைப்பினரும் அறிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இஐஏ அறிக்கையை எதிர்த்து ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து நூதன போராட்டம் - undefined
புதுக்கோட்டை: இஐஏ அறிக்கைக்கு எதிராக முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதனப் போராட்டம் நடத்தினர்.
அந்த வகையில் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் அண்ணா சிலை அருகே 30க்கும் மேற்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளைஞர்கள் முகத்தில் ஆக்சிஜன் மாஸ்க் அணிந்து நூதன முறையில் போராட்டத்தை நடத்தினர்.
இஐஏ திருத்தம் சட்டமாக அமல்படுத்தப்பட்டதால், நாட்டில் ஒரு புல், பூண்டு கூட மிஞ்சாது; அதனால் இதனை அமல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். வரும் காலத்தில் அனைவரும் உயிர் வாழ ஆக்சிஜன் நிரம்பிய பையுடன்தான் வெளியில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மையப்படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.