புதுக்கோட்டை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இறைவணக்கக் கூட்டத்தில் நிற்க முடியாமல் பள்ளி மாணவர்கள்தவித்து வருகின்றனர். இதனையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா, புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலையில் நடைபெறும் இறைவணக்க கூட்டம் அவரவர் வகுப்பிலேயே நடத்தலாம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மாணவர் நலன் கருதி முதன்மைக் கல்வி அலுவலர் எடுத்த முடிவு - Greetings
புதுக்கோட்டை: வெயில் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இறைவணக்கம் கூட்டம் அவரவர் வகுப்பிலேயே நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
prayer
இதுகுறித்து வனஜா கூறுகையில், “வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக காலை இறைவணக்கம் கூட்டத்தில் மாணவர்கள் சிலர் மயக்கமடையும் சூழல் உள்ளதால் வெயிலின் தாக்கம் குறையும் வரை வகுப்பறையில் வைத்து இறைவணக்க கூட்டத்தினை நடத்துமாறும் அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலர்களையும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.