தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடுகுடுப்பைக்காரரின் கூகுள் பே வசூல் - மடக்கிப்பிடித்த போலீஸ் - புதுக்கோட்டை மாவட்ட குற்றச் செய்திகள்

புதுக்கோட்டையில் நூதன முறையில் பொதுமக்களிடம் பணம் மோசடி செய்ததாக குடுகுடுப்பைக்காரரை அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 25, 2022, 6:39 PM IST

புதுக்கோட்டை:பொன்னமராவதி அருகேவுள்ள சுந்தரசோழபுரத்தில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் வீடு வீடாக சென்று குடும்பங்களில் பிரச்சினை உள்ளதாகவும் அந்தப் பிரச்சினையால் குடும்பத்துக்கு பெரிய ஆபத்து உள்ளதாக கூறி, அதனை நிவர்த்தி செய்ய சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அப்பகுதி பெண்கள் 1500, 2000, 3000 என பணம் கொடுத்துள்ளனர்.

கீழப்பட்டியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி செல்வம் என்பவரிடம் அவரது குடும்பத்தில் பிரச்சினை உள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்காக அவரது மோதிரத்தை வாங்கியுள்ளார். மேலும், பூஜை செய்ய வேண்டும் எனவும் பூஜை செலவுக்காக 3000 ரூபாய் கூகுள் பே செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மோதிரத்தை கழட்டி வைத்த பிறகு செல்வத்திற்கு மயக்கம் வருவது போல இருந்துள்ளது.

உடனே சுதாரித்துக் கொண்ட செல்வம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்கவே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அந்த குடுகுடுப்பைக்காரரை சுற்றி வளைத்து பிடித்தனர். அதனையடுத்து பொன்னமராவதி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரித்ததில் அவர் திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள் மந்திர, எந்திர தகடுகள் மற்றும் முத்து போன்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அவரை பொன்னமராவதி காவல் துறையினர் புதுக்கோட்டை குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.

குடுகுடுப்பைகாரர் மீது பணம் மோசடி புகார்

இதையும் படிங்க:கல்லூரி மாணவியின் கணவரை தாக்கிய சேர்மன் கைது!

ABOUT THE AUTHOR

...view details