இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா கூறியதாவது:
"புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 167 பள்ளிகள் இருக்கின்றன. இதில் 2011 மாணவ மாணவிகள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
பிளஸ் டூ தேர்வு முடிவு வெளியீடு: புதுக்கோட்டையில் 90.1% தேர்ச்சி!
புதுக்கோட்டை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டம் 90.1 சதவிகிதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 15வது இடத்தை பிடித்துள்ளது.
அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 ஆயிரத்து 191 மாணவர்கள் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். மொத்தம் 49 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 12 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.47 சதவிகிதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 70 சதவீதத்திற்கு குறைவாக இரண்டு பள்ளிகள் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்த பள்ளிகளுடன் பார்க்கும் பொழுது புதுக்கோட்டை மாவட்டம் 24 வது இடத்திலும் அரசுப்பள்ளிகள் உடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 15 ஆவது இடத்திலும் இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்வியானது மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆசிரியர்களின் உழைப்பாலும், இந்த முறை நல்ல தேர்ச்சி விகிதத்தை கொடுக்க முடிந்தது" என தெரிவித்தார்.