தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நோட்டாவிற்கு ஓட்டு போடுங்கள்...!' - புதுக்கோட்டை

புதுக்கோட்டை: தொகுதியை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாவட்டம் முழுவதும் அகில இந்திய சமூக நல காந்தி பேரவை சார்பில் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரை நடைபெற்றுவருகிறது.

தினகரன்

By

Published : Mar 27, 2019, 11:25 PM IST

இது தொடர்பாக காந்தி பேரவையில் புதுக்கோட்டை மாவட்ட நிறுவனர் தினகரன் கூறியதாவது;

புதுக்கோட்டை மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால், அரசியல் விஷமிகளின் செயலால் புதுக்கோட்டை தொகுதி பறிபோயிருப்பது மிகப்பெரிய கண்டனத்திற்கு உட்பட்டதாகும்.

எங்கள் மாவட்டம் தனக்கென்று தனி நாடாளுமன்றஉறுப்பினர் இல்லாமல் தனது அடையாளத்தை இழந்து நிற்கிறது. புதுக்கோட்டை மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்க வேண்டுமென்றால் ராமநாதபுரம், கரூர், திருச்சி ஆகிய ஊர்களுக்கு செல்ல வேண்டுமா? இயற்கை பேரிடர் ஏற்பட்ட சமயத்தில் மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை கூட நாடாளுமன்ற உறுப்பினர் வந்து எட்டிப் பார்க்கவில்லை.

எனவே, அரசியலமைப்புச் சட்டப்படி வாக்களிக்காமல் இருந்தால்தானே குற்றம். அதையே 49ஓ பிரிவின்படி நோட்டாவிற்கு வாக்களித்தால் தவறல்ல. இவர்களுக்கு வாக்களித்து எவ்வித நலன்களையும் பெறாமல் இருப்பதைவிட நோட்டாவுக்கு வாக்களித்து இந்தியாவையே புதுக்கோட்டை மாவட்ட பக்கம் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும்; அப்பொழுதுதான் அரசியல்வாதிகளுக்கு புத்திவரும்.

அரசியல் கட்சிகள் நோட்டாவிற்கு வாக்களிப்பதால்என்ன பயன் என்று கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு வாக்களிப்பதால் மட்டும் என்ன பயன் இருக்கப்போகிறது? இப்போது வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தவித பயனும் இல்லை.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். அதுவரை நோட்டாவிற்கு நாங்கள் பரப்புரைசெய்துகொண்டே இருப்போம் எதற்கும் பிடி கொடுக்கப் போவதில்லை.

உறவுகளை விட உரிமை முக்கியம்; கட்சிகளை விட உரிமை முக்கியம் இதுதான் எனது நோக்கம். இவ்வாறுஎன்று தினகரன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details