புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் தட்டாவூரணியில் ஒரு குளம் உள்ளது. அந்த குளத்தைக் கிராமத்தினரே அவ்வப்போது தூர்வாரிக் கொண்டுவந்தனர். ஆனால் தற்போது அவர்களிடம் நிதி இல்லாத காரணத்தால் தூர்வாரக் கோரி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிறு உதவியாவது அரசு செய்யலாமே- பொதுமக்கள் கோரிக்கை - thattaoORANI
புதுக்கோட்டை: குளத்தைத் தூர்வாரக் கோரி தட்டாவூரணி பொதுமக்கள் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
தட்டாவூரணி குளம்
மேலும் அந்த குளக்கரையில் தடுப்புச்சுவர் இல்லாத சாலையும் உள்ளது. எனவே அவ்வழியே செல்லும் வாகனங்கள் குளத்தின் உள்ளே சென்று விபத்து உள்ளாகின்றன. சமீபத்தில்கூட குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஆட்டோ குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது.
ஆகையால் இது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனே அந்த குளத்தைச் சுற்றி வேலி அமைத்துத் தர வேண்டும் என்றும் இனி மழைக்காலம் என்பதால் குளத்தைத் தூர்வாரி தரவேண்டுமென்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.