புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பாகவும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருப்பதற்கு பாதுகாப்பு பணியில் நாங்கள் ஈடுபட உள்ளோம், நீங்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் வந்த 92 துணை ராணுவப் படையினர் மற்றும் 300க்கும் மேற்பட்ட சட்டம்-ஒழுங்கு காவல் அதிரடி படை வீரர்கள் பேரணியாக கொடி அணிவகுப்பை நடத்தினர்.