தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்; களத்தில் இறங்கி தாகம் தீர்க்கும் இளைஞர் - டேங்கர் லாரி மூலம் தண்ணீர்

விராலிமலை பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வராததால், இளைஞர் ஒருவர் சொந்த செலவில் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கிய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்; களத்தில் இறங்கிய இளைஞர்..!
குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்; களத்தில் இறங்கிய இளைஞர்..!

By

Published : Nov 24, 2022, 12:57 PM IST

புதுக்கோட்டை: விராலிமலை ஊராட்சியில் தொடர்ந்து காவிரி குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர், கூடுதலாக காவிரி கூட்டுக்குடிநீர் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.

பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், பல கட்டப்போராட்டங்கள் நடத்தியும் இதுவரை முழுமையாக குடிநீர் கிடைக்கப்பெறவில்லை. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வந்த குடிநீர் தற்போது 20 நாட்களுக்கும் மேலாக வராமல் இருக்கிறது.

இதுகுறித்து விராலிமலை ஊராட்சி மன்றத்தலைவர் ரவி-யிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அலட்சியப்போக்குடனே தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. விராலிமலை ஐயப்பா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அந்தப் பகுதிகளுக்கு கடந்த 20 நாட்களாக தண்ணீர் வராததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற இளைஞர் பொதுமக்களின் கஷ்டத்தை அறிந்து, டேங்கர் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்தார்.

மேலும் அவர் மூன்று டேங்கர் லாரி மூலம் கிட்டத்தட்ட 7,000 லிட்டர் தண்ணீரை மக்களுக்கு விநியோகம் செய்தார். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தான் அரசு என்ற நிலை போய், மக்களின் தேவைகளை மக்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டியநிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம்; களத்தில் இறங்கி தாகம் தீர்க்கும் இளைஞர்

இதேபோல் விராலிமலை பகுதியில் இளைஞர் ஒருவர் கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தற்போது இளைஞர் ஒருவர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கியது மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ளது. விராலிமலையில் குடிநீர் சரியாக விநியோகிக்கவில்லை என்றால் நாளை விராலிமலை சோதனைச்சாவடியில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:'போதைப்பொருள் விற்பனையில் பாஜக.. அதிமுகவினர் சிறை செல்வது உறுதி'

ABOUT THE AUTHOR

...view details