தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டையில் கருப்பு பூஞ்சை காரணமாக ஒருவர் உயிரிழப்பு - கருப்பு பூஞ்சை காரணமாக ஒருவர் உயிரிழப்பு

புதுக்கோட்டை: கருப்பு பூஞ்சை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

black
black

By

Published : Jun 1, 2021, 7:34 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை 8 பேர் கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று (ஜூன் 1) கருப்பு பூஞ்சை காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளக்கொல்லையைச் சேர்ந்த செல்வராஜ்(55) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான வெள்ளகொள்ளைக்கு கொண்டு வரப்பட்டு அறந்தாங்கி நகராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது. செல்வராஜூக்கு தேவையான மருந்துகளும் தடுப்பூசிகளும் கிடைக்காததால் உயிரிழந்தாக உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details