புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (65). இவர் அக்கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் மீன் பிடித்து விட்டு, அந்த மீன்களை கரையில் வைத்துவிட்டு, மீண்டும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராமல் நிலைதடுமாறி குளத்தில் விழுந்து, நீரில் மூழ்கியுள்ளார். இதை கண்ட அக்கிராம மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, காவல் துறையினர் முதியவரின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.