தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வடமாநில இளைஞருக்கு தூக்கு! - சிறுவனை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

புதுக்கோட்டை: மனவளர்ச்சி குன்றிய வாய்பேசமுடியாத சிறுவனை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி கொலை செய்த வடமாநில இளைஞருக்கு மரண தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த வடநாட்டு இளைஞருக்கு மரண தண்டனை
பாலியல் தொல்லை கொடுத்த வடநாட்டு இளைஞருக்கு மரண தண்டனை

By

Published : Feb 18, 2021, 7:47 PM IST

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் டானிஷ் பட்டேல்(34) என்பவர் புதுக்கோட்டை மாவட்டம், மூடுக்கு என்கிற கிராமத்தில் 'கிரஷர்' இல் வேலை பார்த்து வந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு டிச., 18 ஆம் தேதி, டானிஷ் பட்டேல் வேலை பார்த்த இடத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் வசித்த மனவளர்ச்சி குன்றிய, வாய் பேச முடியாத 17 வயது சிறுவனை இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள காட்டில் வைத்து சிறுவனை தன்பால் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார்.

இந்த வன்புணர்வால் உடல் ரீதியாக பாதிப்புக்குள்ளான சிறுவன், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், சுமார் 18 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.

இவ்வழக்கில் கைதான டானிஷ் பட்டேல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இவ்வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று (பிப்.18) நீதிபதி சத்யா, டானிஷ் பட்டேல் குற்றவாளி என உறுதிசெய்து,

அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு நிவாரணமாக 6 லட்ச ரூபாய் வழங்கவும், அதில் உடனடியாக 3 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்!

ABOUT THE AUTHOR

...view details