தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதிய பள்ளி கட்டடம்; அடிக்கல் நாட்டிய அமைச்சர் - புதுக்கோட்டை

புதுக்கோட்டை: புதிதாக கட்டப்பட உள்ள பள்ளி கட்டடத்திற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அடிக்கல் நாட்டினார்.

rakupathi
rakupathi

By

Published : Jul 20, 2021, 4:22 AM IST

சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், ஓனாங்குடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உடனிருந்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, “ தமிழ்நாடு பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை முதலமைச்சர் தமிழ்நாட்டில் செயல்படுத்துகிறார். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திலும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஓனாங்குடி கிராமத்தில் ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்த வகையில் திருமயம் சட்டமன்ற தொகுதியிலும் பொதுமக்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிராமங்களில் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தேவைப்படும் இடங்களில் கூடுதல் பேருந்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை புதிதாக திறக்க நடவடிக்கை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமயம் தொகுதியில் பொதுமக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்கும் வகையில் பல்வேறு துணை மின் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details