புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சீமான் தமிழ்தேசியக் கொள்கையை விட்டால் பாஜக கூட்டணிக்கு அவரை வரவேற்போம் என ஹெச்.ராஜா கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஹெச்.ராஜா எத்தனை முறை அழைத்தாலும் வாய்ப்பில்லை ராஜா என்பது தான் பதிலளித்த சீமான், நட்பு என்பது வேறு; அரசியல் நிலைப்பாடு என்பது வேறு என்றும் பாஜகவிற்கு தன்னை அழைப்பது தங்களது வளர்ச்சியை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியம் ஜெயிக்கும்: தமிழ்த் தேசியம் (Tamil desiyam and Dravidam) தோற்கும் என திருமாவளவன் சொல்வதற்கு உரிமையில்லை, இந்த தமிழ்தேசியத்தை அவரிடமிருந்து தான் நாங்கள் கற்றோம் என்றும் நாங்கள் அவரது மாணவர்கள் என்றும் எப்போது ஆசிரியர்கள் ஓடி ஜெயிக்க முடியாது என்றும் மாணவர்கள் தான் ஜெயிக்க முடியும் என்றும் என்று அவர் கூறியுள்ளார்.
உரிமைத்தொகைப் பெற பிச்சைக்காரனாக இருக்கணுமா?: தமிழ்நாடு அரசிடம் ரூ.1000 உரிமைத்தொகை (magalir urimai thogai scheme) யாரும் கேட்கவில்லை, அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை என்று தேர்தலின்போது அறிவித்த அரசு ஏன் தற்போது விதிமுறைகளை விதிப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பினார். அப்படியெனில் பிச்சைக்காரனாக இருந்தால்தான், உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்ற நிலைக்கு அரசு தள்ளிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். நகைக்கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதியாக திமுக கூறியதையடுத்து, வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துவிட்டு கடன் தள்ளுபடி கிடைக்காமல் உள்ளதைப் போன்று இந்த ரூ.1000 உரிமைத்தொகை திட்டமும் என்றார்.
காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை:டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் மன அழுத்தத்தின் காரணமாக தான் உயிரிழந்துள்ளதாகவும், 6 ஆண்டுகளாக பணிச்சுமையில் அவர் இருந்ததாகவும், தொடர்ந்து அவர் கேட்டவாறு விடுமுறை அளிக்காததால் அவருக்கு அழுத்தம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், இது போன்ற சம்பவம் இனி நடக்காமலிருக்க சுழற்சி முறையில் காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
'பிரபாகரன்' குறித்த பயனற்ற பேச்சு வேண்டாம்:சென்னை கடற்கரையில் பேனா சிலை (Pen Statue for karunanidhi) அமைத்தால் அதை கண்டிப்பாக உடைப்போம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். மேலும், பிரபாகரன் (Prabhakaran Still Live) உயிரோடு உள்ளாரா? அல்லது இறந்துவிட்டாரா? என்பது முடிந்துபோன கதை என்றும் அதைப் பேசி பிரயோஜனம் இல்லை என்றும் விடுதலைப் புலிகள் (LTTE) மீதான தடையை நீக்குவதற்கும், அவர்களுக்கான குடியுரிமையை வழங்குவதற்கும், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கவும், கச்சத்தீவை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தினார்.
இலங்கை தமிழர்களுக்கு அரசு வேலை: ராணுவம், காவல்துறை ஆகியவற்றில் இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என இலங்கை அரசையும், இந்திய அரசையும் வலியுறுத்தினார். மணிப்பூர் பிரச்னையை திசை திருப்புவே, பொதுசிவில் சட்டத்தை மத்திய அரசு திசை திருப்புவதாகவும், இதேபோல தான், தமிழ்நாட்டிலும் செந்தில் பாலாஜி மற்றும் ஆளுநர் பிரச்சனையை தமிழ்நாடு அரசு கையில் எடுத்து பிற பிரச்னைகளை மறைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.