புதுக்கோட்டையில் நடந்த ரத்ததான முகாமில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எனக்கு தெரிந்த வரை அனைத்து கட்சிகளிலும் ஒருத்தர்தான் தலைவராக இருப்பார். ஏதேனும் ஒரு கிராமத்தில்கூட உருவாகும் சங்கத்திலோ பஞ்சாயத்திலும் ஒரு தலைவர்தான் இருப்பார். மற்றவர்கள் பொருளாளர் செயலாளர்கள் என இருப்பார்கள். பாம்புக்கு கூட இரட்டைத் தலை இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் கட்சியில் இரட்டைத்தலை இருப்பதை இப்போதுதான் நான் பார்க்கிறேன்.
'எதற்குதான் முதலமைச்சர் இருக்கிறார்..?' - முத்தரசன் கேள்வி - kaveri
புதுக்கோட்டை: "கர்நாடகாவில் இருந்து வர வேண்டிய தண்ணீர் சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறியிருக்கும் முதலமைச்சர் எதற்குதான் இருக்கிறார்..?" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. சென்னையில் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.1500 விற்பனை ஆனது. தற்போது ரூ.5000-க்கு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சட்டப்படி நடுவர் மன்ற தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் இன்னும் கொடுக்கப்படவில்லை. கர்நாடகாவில் இருந்து வர வேண்டிய தண்ணீர் சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் பார்த்துக்கொள்வார்கள் என்று நேற்று முதலமைச்சர் கூறியிருப்பது அவர் விரைவில் ராஜினாமா செய்து கொள்வார் என்பதை தெரியப்படுத்துவது போல தெரிகிறது. இதிலிருந்து முதலமைச்சர் எதற்குதான் இருக்கிறார் என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாடு ஏராளமான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் தற்போது அரசியலில் இரு தலைமை பிரச்னை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறுவை சாகுபடி ஏழு ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது. அதற்காக எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்காகவாவது கர்நாடகாவில் இருந்து விரைவில் தண்ணீர் விட வேண்டும்” என்றார்.