இது குறித்து அவர்கள் கூறுகையில், ' கறம்பக்குடி அருகே உள்ள முதலிப்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். பட்டியலினத்தவர்கள் என்று எங்களுக்கென்று தனியே காலனி உள்ளது. அங்கு தான் நாங்கள் வசித்து வருகிறோம்.
அந்த காலத்திலிருந்து இன்று வரை எங்களுக்கு சுடுகாடு, குடிநீர் சாலை என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மனு அளிக்க வந்த முதலிப்பட்டி கிராம மக்கள் இந்த முறை மனு கொடுக்க வந்திருக்கிறோம். இது எத்தனையாவது முறையாக மனு அளிக்க வருகிறோம் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. அந்தக் காலத்தில் தான் நாங்கள் ஒதுக்கப்பட்டோம். ஆனால், இன்றும் அதே அவலநிலை தான் எங்களுக்குத் தொடர்ந்து நடந்து வருகிறது.
பட்டியலினத்தவர்கள் என்றாலும், நாங்களும் மனிதர்கள் தானே. எங்களுக்கு அடிப்படைத் தேவைகளை செய்து தருவது அரசாங்கத்தின் கடமை தானே. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து, எங்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் '' என்று மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பேரனால் தீக்குளிக்க முயன்ற தாத்தா, பாட்டி - திருப்பூரில் சோகம்!